/* */

குமாரபாளையத்தில் 3 கோவில்களில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை துவக்கம்

குமாரபாளையத்தில் உள்ள 3 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான யாக சாலை பூஜைகள் துவங்கியுள்ளன.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் 3 கோவில்களில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை துவக்கம்
X

குமாரபாளையம், சேலம் சாலையில் உள்ள மகா கணபதி, முனியப்பா சுவாமி, கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜை நடைபெற்றது.

குமாரபாளையம் , கோட்டைமேடு சாந்தபுரி நகரில், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, அக். 22ல் காலை 07:00 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அக். 23ல், முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இதை தொடர்ந்து, நாளை அக்.24ல் அதிகாலை 03:00 மணிக்கு, மூன்றாம் கட்ட யாக சாலை பூஜை, அதிகாலை 04:30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

இதேபோல், குமாரபாளையம் அபெக்ஸ் காலனியில் உள்ள நாகசுந்தரகணபதி, நாகேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அக். 8ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. அக். 15ல் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது. அக். 22ல் பவானி கூடுதுறை முக்கூடலில் இறுதி தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு கோபுர கலசம் வைத்தல், முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றன.

அக். 24ல் அதிகாலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், காலை 07:15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

அபெக்ஸ் காலனி நாக சுந்தரகணபதி, நாகேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடந்த யாகசாலை பூஜைகள்.

குமாரபாளையம் சேலம் சாலையில் மகா கணபதி, முனியப்பா சுவாமி, கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவையொட்டி அக். 22ல் மாலை 03:00 மணிக்கு பவானி கூடுதுறை முக்கூடலில் இறுதி தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. அக். 23ல் முதல் மற்றும் இரண்டாம் கட்ட யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

நாளை, அக். 24ல் அதிகாலை 03:00 மணிக்கு மூன்றாம் கட்ட யாக சாலை பூஜைகள், அதிகாலை 04:15 மணிக்கு அனைத்து மூர்த்திகளுக்கும் சம காலத்தில் மகாகும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Updated On: 23 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!