/* */

யோகாவில் உலக சாதனை நிகழ்த்திய குமாரபாளையம் இளைஞர்: ஒரு பார்வை

யோகாவில் பல்வேறு கோப்பை, பதங்கங்களையும் பெற்று குமாரபாளையம் இளைஞர் அரவிந்த் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

HIGHLIGHTS

யோகாவில் உலக சாதனை நிகழ்த்திய குமாரபாளையம் இளைஞர்: ஒரு பார்வை
X

யோகாவில் உலக சாதனை படைத்த அரவிந்த்.

குமாரபாளையம் நாராயண நகர் லட்சுமிநாராயணன், சாந்தி தம்பதியர்களுக்கு செப்.2, 1999ல் பிறந்தவர் அரவிந்த். இவரது புனைபெயர் யோகா அரவிந்த். இவர் சிறு வயதில் இருந்தே யோகாசன பயற்சிகளை மேற்கொண்டவர்.

இவர் தன் பள்ளி படிப்பை ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போதே பழ யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டவர். 8ம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது யோகா பயிற்சி செய்ய ஆரம்பித்து, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். இந்த போட்டிகளில் நிறைய தங்கபதக்கங்களையும், வெள்ளிப்பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இவ்வாறு படிப்படியாக முன்னேறி தன்னுடைய 14ம் வயதில் முதல் தேசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இந்திய அணியில் தேர்வு பெற்றார்.

10ம் வகுப்பை முடித்த நேரத்தில் 2016ம் ஆண்டில் முதல் சர்வதேச உலக யோகா கோப்பை போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றது. 89 நாடுகள் பங்கேற்ற இந்த சர்வதேச போட்டியில் இந்தியாவிற்காக உலக உலக கோப்பையும், தங்கப்பதக்கமும் பெற்று தந்துள்ளார்.

முதல் தங்கப்பதக்கத்திற்கு பிறகு ஆசியன் கோப்பை, உலக கோப்பை, சர்வதேச சாம்பியன்ஷிப் போன்ற பழ போட்டிகளிலும், அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று, இந்தியாவிற்கு தங்கப்பதக்கம், வெள்ளி பதக்கம், வெண்கலப்பதக்கம் என 6 தங்கப்பதக்கங்கள், 3 வெள்ளிப்பதக்கங்கள் பெற்று தந்துள்ளார். இந்த சாதனைகள் அனைத்தும் அரவிந்த் தன் 18 வயதில் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது யோகா சாதனைகளுக்காக தமிழக அரசும் அங்கீகரித்து பல விருதுகள் வழங்கியதன் அடிப்படையில் வேலூர் நியூ ஜெருசலேம் மருத்துவ கல்லூரியால் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 18 வயதில் முனைவர் பட்டம் பெறும் உலகின் முதல் நபர் அரவிந்த் ஆவார்.

அதன்பின் தமிழ்நாடு யோகா கூட்டமைப்பின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டின் முதன் முறையாக முதல் இளைய பொதுச் செயலாளர் என்பவரும் இவரே. 19 வயதில் தென்னிந்திய யோகா செயலாளராகவும், 20 வயதில் தேசிய யோகா செயலாளராகவும் பதவி உயர்வு பெற்றார். அரவிந்த் கடின உழைப்பால் (NOBLE WORLD RECORD) நோபல் உலக சாதனைகள் தனியார் லிமிடெட் நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால் இவருக்கு சர்வேதேச சிறந்த இளைஞர் விருது 2021ல் வழங்கப்பட்டது. இந்த விருது அவரை மாடலிங் மற்றும் சினிமா துறையில் மிகவும் பிரபலமாக்கியது. மாடலிங் தொழிலில் முதல் சாதனையாக சென்னையில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் கலந்து கொண்ட அரவிந்த், மிஸ்டர் யூத் ஐகான் விருதை பெற்றார். கோவை மாடலிங் போட்டியில் பங்கேற்று 2021ம் ஆண்டில் சிறந்த தோற்றம் என்ற விருதை பெற்றார்.

இவருக்கு 3 சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் இவரை யோகா அரவிந்த் என்ற புனைப்பெயருடன் தான் அழைக்கிறார்கள். 2016 முதல் 2021 வரை அரவிந்த் யோகா மையம் என்ற மையம் தொடங்கி, திறமையான இளைஞர்களை உருவாக்கி, பல யோகா போட்டிகளில் பங்கேற்க வைத்து பல தங்கப்பதங்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 14 Sep 2021 5:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!