சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கு குமாரபாளையம் இளைஞர் தேர்வு
சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர் இளங்கோவன்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர், மல்யுத்த விளையாட்டில் சிறந்து விளங்கி வருகிறார். மாநிலம் மற்றும் தேசிய அளவிலான மல்யுத்த போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்ற இளங்கோவன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, மே மாதம் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெறும் சர்வதேச அளவிலான மல்யுத்த போட்டிக்கு இரண்டாவது முறையாக தேர்வாகி உள்ளார். மல்யுத்த வீரர் இளங்கோவனுக்கு குமாரபாளையம் நகர முக்கிய பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சர்வதேச போட்டிக்கு குமாரபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் இளங்கோவன் தேர்வாகி உள்ளது குறித்து, மல்யுத்த மூத்த வீரர்கள் கூறியதாவது:
ஒரு மல்யுத்த போட்டி என்பது இரண்டு போட்டியாளர்கள் அல்லது ஸ்பேரிங் கூட்டாளர்களிடையே ஒரு உடல் போட்டியாகும். இந்தப் போட்டியில் பாரம்பரிய வரலாற்று மற்றும் நவீன பாணிகளுடன் மாறுபட்ட விதிகளைக் கொண்ட பரந்த அளவிலான பாணிகளும் உள்ளன. மல்யுத்த நுட்பங்கள் மற்ற தற்காப்பு கலைகள் மற்றும் ராணுவ கை-கொடுக்கும்-கை போர் முறைகளில் இணைக்கப்பட்டு உள்ளன.
மற்போர் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும். இது உலகின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயும் உள்ள ஒரு கலை வடிவம். இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. "மல்:என்பதற்கு வலிமை, மற்றொழில், எனப் பொருள் வழங்குகின்றன தமிழில், இம் மற்போர் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது. மற்போர் இன்று ஒரு விளையாட்டாக, அரங்கக் கலையாகப் பெரிதும் பயிலப்படுகிறது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும் என அவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu