உயரம் தாண்டுதலில் குமாரபாளையம் இளைஞர் சாதனை
படவிளக்கம் : சென்னையில் நடந்த கேலோ விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த தருண்விகாஸ்க்கு, சேலம் டி.எஸ்.பி. சண்முகம் பதக்கம் அணிவித்து, புத்தகங்கள் வழங்கி பாராட்டினார்.
உயரம் தாண்டுதலில் குமாரபாளையம் இளைஞர் சாதனை
சென்னையில் நடந்த கேலோ விளையாட்டு போட்டியில் குமாரபாளையம் இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு விழாவில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் குமாரபாளையம் ஓலப்பாளையம் பகுதியைச் சார்ந்த இளம் வீரர் தருண் விகாஸ் பங்கேற்று, தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பாக அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் பாராட்டு விழா நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சேலம் மாவட்ட டி.எஸ்.பி. சண்முகம் பங்கேற்று, சாதனை படைத்த தருண் விகாஸ்க்கு பதக்கம் அணிவித்து, புத்தகங்கள் வழங்கி பாராட்டினார். பஞ்சாலை சண்முகம், ஆறுமுகம், சந்திரசேகர், உள்பட பலர் பங்கேற்றனர்.
சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை கடந்த 19ஆம் தேதி மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.
18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu