ஆசிய அளவிலான யோகாசன போட்டிக்கு குமாரபாளையம் யோகாசன மாணவி தேர்வு

ஆசிய அளவிலான யோகாசன போட்டிக்கு குமாரபாளையம் யோகாசன மாணவி தேர்வு
X

ஆசிய அளவிலான யோகாசன போட்டிக்கு செய்யப்பட்ட குமாரபாளையம் மாணவி மதுமிதா தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார்.

ஆசிய அளவிலான யோகாசன போட்டிக்கு குமாரபாளையம் யோகாசன மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய அளவிலான யோகாசன போட்டிக்கு குமாரபாளையம் யோகாசன மாணவி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஆசிய அளவிலான யோகாசன போட்டி வருகிற ஜூன் 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் வியட்நாம் நாட்டில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள 3 பேரில், குமாரபாளையம் அரவிந்த் யோகாசன மையத்தை சேர்ந்த மதுமிதா என்ற மாணவியும் ஒருவராவார். மதுமிதாவை மாநில விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இவர் வியட்நாமில் நடைபெறும் யோகா போட்டியில் 6 வகையான யோகாசன பிரிவுகளில் பங்கேற்கவுள்ளார். இதுவரை 4 வகையான யோகாசன பிரிவுகளில்தான் மற்றவர்கள் பங்கேற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. மதுமிதாவை முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு யோகா கூட்டமைப்பின் சார்பில் உலக சாதனை யோகா போட்டி நடத்தபட்டது. பொது செயலாளர் அரவிந்தன், போட்டி ஒருங்கிணைப்பாளர் மதுமிதா தலைமை வகித்தனர். நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை, திருநெல்வேலி, கடலூர், சென்னை உள்ளிட்ட பல பகுதியிலிருந்து, மூன்று வயதிலிருந்து, 30 வயது வரையிலான 300 நபர்கள் பங்கேற்றனர். ஒரே இடத்தில் வட்டையாசனம் எனப்படும் யோகாசனம் தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. நோபிள் வோர்ல்டு ரெக்கார்டு அமைப்பினர் இதனை அங்கீகரித்தனர். தேசிய அளவில் யோகாவில் தங்கப்பதக்கம் வென்ற போட்டி ஒருங்கிணைப்பாளர் மதுமிதாவிற்கு சிறந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விருது வழங்கப்பட்டது.

யோகா பற்றி மூத்த பயிற்சியாளர்கள் கூறியதாவது:-

யோகக் கலை அல்லது யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.

யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. மேலும் யோகா வஜ்ரயான மற்றும் திபெத்திய புத்த மத தத்துவங்களில் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.

யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகாவின் தோற்றம் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றது. இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. . சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியான நிலைகளை புள்ளிவிவரங்கள் காட்டி சித்தரிக்கின்றன.. இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது சீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.

நோன்பியர் எனப்படும் தவ முனிவர்கள் கைகளை ஊன்றிக்கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்தது பற்றி நற்றிணைப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. இதனை அது கையூண் இருக்கை என்று குறிப்பிடுகிறது தினைப்புனத்தில் விளைந்திருக்கும் தினைக் கதிரைக் கிள்ளிச் சென்ற குரங்கு ஒன்று அதிலுள்ள தினைகளைக் கைகளால் நெருடி வாயில் அடக்கிக்கொண்டிருந்த காட்சி நோன்பியர் கையூண் இருக்கை போல் இருந்ததாம். இதனை உயிர்ப்புப் பயிற்சி எனக் கருதலாம்.

இவ்வாறு பயிற்சியாளர்கள் கூறினார்கள்.


Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!