குமாரபாளையம் காவிரி கரையோரத்தில் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை
குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் தண்டோரா போடப்பட்டது.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை அதிகம் பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக வரும் நிலையில் நேற்று மாலை முதல் அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் படிக்கட்டுக்கு மேலே ஏறிய நிலையில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. அதனால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இது குறித்து வருவாய்த்துறையினர் கூறும்போது காவிரியில் அதிக நீர் வந்து கொண்டிருப்பதால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மேடான இடங்களுக்கு செல்ல வேண்டி கூறி வருகிறோம். மேலும் தங்குவதற்கு தேவையான இடங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். நாங்களும், நகராட்சி பணியாளர்களும் தீவிர கரையோர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu