குமாரபாளையம் வந்த மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் தண்ணீர்

குமாரபாளையம் வந்த மேட்டூர் கிழக்குக்கரை  வாய்க்கால் தண்ணீர்
X

மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று குமாரபாளையம் வந்தடைந்தது.

மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இந்த தண்ணீர் குமாரபாளையம் வந்தடைந்தது.

மேட்டூர் கிழக்குக் கரை வாய்க்கால் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இந்த தண்ணீர் நேற்று குமாரபாளையம் வந்தடைந்தது.

இதுகுறித்து குமாரபாளையம் விவசாயிகள் கூறுகையில், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே இங்கு பயிர் செய்ய முடியும். தண்ணீர் இல்லாததால் பயிர் செய்ய முடியமால் வெற்று நிலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஊராட்சிகள் சார்பில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர், தற்போது வாரம் ஒருமுறை, நான்கு நாட்களுக்கு ஒருமுறை, என்ற வகையில் விடப்படுகிறது.

கால்நடைகளுக்கு குடிநீர் தேவையை கூட நிறைவேற்ற முடியாத நிலை இருந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளதால் வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என முதல்வருக்கு விவசாயிகள் சார்பில் மனு அனுப்பப்பட்டது.

இதன் பலனாக வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil