குமாரபாளையத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்

குமாரபாளையத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்
X
குமாரபாளையம் தாலுகாவில் இன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகாவில் இன்று வியாழக்கிழமை (22.07.2021) அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் கிராம அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் கிராம அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!