குமாரபாளையத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு பிரிவு உபசார விழா…
பணி மாறுதலில் செல்லும் வெங்கடேசன் புதிய உதவி ஆய்வாளர் சஞ்சீவியிடம் ஆவணங்களை ஒப்படைத்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் போக்குவரத்து காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த வெங்கடேசன் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, உதவி ஆய்வாளர் வெங்கடேசனுக்கு பிரிவு உபசார விழா போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, உதவி ஆய்வாளர் வெங்கடேசனின் பணியை பாராட்டி பலரும் பேசினர். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியில் இருந்து உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த வெங்கடேசன் கொரோனா காலகட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டார்.
விழாவிற்கு பிறகு, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் இருந்து குமாரபாளையம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்ட சஞ்சீவியிடம் ஆவணங்களை வெங்கடேசன் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகம், சுகுமாறன், வனிதாமணி, சதீஷ் உள்ளிட்ட போலீஸார் பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, போக்குவரத்து காவல் அதிகாரிகள் கூறியது:
சாலையில் செல்லும்போது இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நம் ஒவ்வொருவரது தலையாய கடமையாகும். போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்போம். விபத்துக்களை தவிர்ப்போம் என போக்குவரத்து காவலர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu