குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
பைல் படம்.
குமாரபாளையம் கிரைம் செய்திகள்:
அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்த ஒருவர் கைது..
குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது பாட்டில் விற்ற நபர் கைது செய்யப்பட்டார். குமாரபாளையம் அருகே எதிர்மேடு வாய்க்கால் கரை அருகே அனுமதி இல்லாமல் மது விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நேரில் சென்ற போலீசார் அங்கு ஒருவர் மது விற்பது கண்டு, அவரை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், கோவிந்தமங்களம் பகுதியை சேர்ந்த சூரசங்கு, 28, என்பது தெரியவந்தது. இவரிடமிருந்த 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
இதுபோல் நகரில் பல இடங்களில் மது விற்பனை நடந்து வந்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு அனுமதி இல்லாமல் மது விற்போரை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். தற்போது இவைகள் குறைந்து ஆங்காங்கே ஒன்று, இரண்டு மட்டும் நடைபெற்று வருகிறது. அதனையும் உடனடியாக செயல்பட்டு அவர்களை குமாரபாளையம் போலீசார் கைது செய்து விடுகின்றனர்.
இது போல் புகையிலை பொருட்கள் விற்பனை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்கும் விதத்தில் நடைபெற்று வந்தது. விரைந்து செயல்பட்ட குமாரபாளையம் போலீசார் அது போன்ற சமூக விரோதிகளை கைது செய்து தற்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புகையிலை பொருட்கள் விற்பனையே இல்லை எனும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை பொதுமக்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.
டூவீலரில் வைத்திருந்த மொபைல் போன், பணம் திருட்டு..
குமாரபாளையம் அருகே டூவீலரில் வைத்திருந்த மொபைல் போன், பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, காப்ரா மலை பகுதியில் வசிப்பவர் துரையரசன், 27. இவர் ஆனங்கூர் சாலை, சேட்டாங்காடு, தங்கவேல் சைசிங் மில் அருகே 6 வருடமாக மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணியளவில் இவரது வீட்டருகில் தனது ஹீரோ டூவீலரை நிறுத்தி விட்டு சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்தார். அப்போது இரண்டு டூவீலரில் வந்த 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க நான்கு பேர், எனது டூவீலர் டேங்க் கவரில் வைத்திருந்த ரெட் மீ என்ற பத்தாயிரம் மதிப்பிலான மொபைல் போன் மற்றும் ரொக்கம் 15 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் துரையரசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu