குமாரபாளையம் பொதுநல சேவகருக்கு இராமலிங்க வள்ளல் விருது

குமாரபாளையம் பொதுநல சேவகருக்கு   இராமலிங்க வள்ளல் விருது
X

ஈரோடு தமிழ் சங்க பேரவை சார்பில் குமாரபாளையம் விடியல் பிரகாஷுக்கு விருது வழங்கப்பட்டது. 

குமாரபாளையம் பொதுநல சேவகருக்கு ஈரோடு தமிழ் சங்க பேரவை சார்பில் இராமலிங்க வள்ளல் விருது வழங்கப்பட்டது.

ஈரோடு தமிழ் சங்க பேரவை சார்பில் 31, 32ம் ஆண்டு இலக்கிய விழா தலைவர் பாலன் தலைமையில் நடைபெற்றது. தமிழ் சேவை, பொதுநல சேவை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தேசிய தலைவர்கள் பிறந்த தினம், பனை விதைகள் நடுதல், திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிகள், விளையாட்டு போட்டிகள், சுகாதார விழிப்புணர்வு, தன்னம்பிக்கை பயிற்சியை மாணவர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்து வரும் குமாரபாளையம் விடியல் பிரகாஷுக்கு இராமலிங்க வள்ளல் விருது மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பொற்கிழி, திருக்குறள் பேரவை தலைவர் திருவள்ளுவர் வழங்கி பாராட்டினார். மல்லை ராமநாதன் உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்