குமாரபாளையம் தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள பிரச்சினைக்கு தீர்வு
குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் (கோப்பு படம்).
குமாரபாளையத்தில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள விவகாரம் தீர்வு காணப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் தவிர, தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் தரவில்லை என புகார் எழுந்தது. இதனால் நேற்றுமுன்தினம் ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்தனர். இது குறித்து நகராட்சி ஆணையாளர் குமரன் கவனத்திற்கு தெரியவந்தது. ஒப்பந்ததாரரை அழைத்து பேசி தீர்வு காணபட்டது. இது குறித்து ஆணையாளர் குமரன் கூறியதாவது:-
குமாரபாளையம் நகராட்சியில் 87 தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மாதம் சம்பள நிலுவை இருப்பதாக தெரியவந்தது. ஒப்பந்ததாரரை அழைத்து பேசி, சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
குமாரபாளையம் காவிரி ஆற்றிலிருந்து பெறப்படும் நீரைக்கொண்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என நகராட்சி கமிஷனர் குமரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகளை உள்ளடக்கிய 7.10 ச.கி.மீ. பரப்பளவு, 85 ஆயிரம் மக்கட்தொகை கொண்டதாகும். இங்கு 22,053 குடியிருப்புகள் உள்ளன. குமாரபாளையம் நகராட்சியின் குடிநீர் திட்டம் காவேரி நகர் பகுதியில் இருந்து, இயல்பு நீரேற்று நிலையம் 1989ல் ஒன்றும், குடிநீர் அபிவிருத்தி திட்டம் 2001ம் ஆண்டிலும் மேற்கொள்ளப்பட்டது. இயல்பு நீரேற்று நிலையத்தில் 60:00 ஹெச்.பி. டர்பைன் மோட்டார், மற்றும் 25:00 எச்.பி. ததிறன் கொண்ட நீர் மூழ்கி மின் மோட்டோர்கள் மூலம், 7.50 எம்.எல்.டி. அளவு குடிநீர், நீரேற்றம் செய்யப்பட்டு, இடைப்பாடி சாலையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து 120 எச்.பி. மோனோ பிளாக் மோட்டார் மற்றும் 50 எச்.பி. திறன்கொண்ட நீர்மூழ்கி மின் மோட்டார் மூலம் 71.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 8 குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து 8 குடிநீர் மேல்நிலை தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
ஆற்றில் நீர்வரத்து குறையும் நிலை ஏற்படுவதை கருதி கடந்த டிசம்பர் மாதம், ஆற்றில் உள்ள குடிநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டது. நாளது தேதி வரை குமாரபாளையம் நகராட்சியில் 13,086 குடிநீர் கிளை இணைப்புகள் 93 பொதுக்குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினசரி குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. தற்சமயம் வரவுள்ள கோடைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக மட்டுமே திறந்து விடப்படும் குறைந்தபட்ச 500 கனஅடி நீரைக்கொண்டு இந்நகரின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய போதுமானதாகும். காவிரி ஆற்றின் நீர் வரத்து, நகரில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் பெறப்படும் தண்ணீரை கொண்டு கோடைக்கால வறட்சியினை ஈடு செய்ய இயலும்.
இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu