குமாரபாளையம் தாலுகா அலுவலக தரை தளத்தில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகம்

குமாரபாளையம் தாலுகா அலுவலக தரை தளத்தில்   செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகம்
X

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும்  வட்ட வழங்கல் துறை அலுவலகம்.

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் துறை அலுவலகம் தரை தளத்தில் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் துறை அலுவலகம் தரை தளத்தில் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் துறை அலுவலகம் 2வது தளத்தில் செயல்பட்டு வந்தது. ரேஷன்கார்டு விண்ணப்பம் செய்ய வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் இரண்டு மாடி ஏறி செல்ல சிரமம் ஏற்பட்டு வந்தது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, உஷா, மல்லிகா உள்ளிட்டவர்கள் சார்பில், வட்ட வழங்கல் துறை அலுவலகம் தரை தளத்திற்கு மாற்றம் செய்ய தாசில்தார் சிவகுமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்பின் வட்ட வழங்கல் துறை அலுவலகம் சார்பில் தரை தளத்தில் செயல்படுகிறது. இதனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!