குமாரபாளையம்: கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு

குமாரபாளையம்: கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு
X

பைல் படம்.

சர்வர் இணைப்பு கிடைக்காததால் கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க குமாரபாளையத்தில் மாணவ, மாணவியர் தவிப்புக்குள்ளாகினர்.

அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பம் ஆன் லைனில் மாணவ, மாணவியர்கள் செய்து வந்த நிலையில், இரு நாட்களாக குமாரபாளையத்தில் சர்வர் இணைப்பு கிடைக்காமல் மாணவ, மாணவியர் தவிப்புக்குள்ளாகினர். இந்த கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூன் 30 என்பதால், நெட் சென்டர்களை தேடி மாணவ, மாணவியர் படையெடுத்து வருகிறார்கள்.

இது குறித்து அரசு கல்லூரி நிர்வாகிகள் கூறும்போது சர்வர் இணைப்பு கிடைக்காததால் விண்ணப்பம் செய்ய தாமதம் ஆகி வருவது ஒரு பக்கம் இருந்தாலும், அது மட்டும் காரணமல்ல. 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் விண்ணபித்தல், பெயர்களில் எழுத்துபிழை இருந்தாலும், வங்கி கணக்கு எண்கள் சில வங்கியில் 10 எண்கள், சில வங்கிகளில் 10க்கும் மேற்பட்ட எண்கள் இருப்பதாலும், இது போன்ற பல காரணங்களால் கூட தாமதம் ஏற்படுகிறது என்றார்கள்.

Tags

Next Story
ai in future agriculture