யோகாசனப் போட்டியில் பதக்கங்களை குவித்த குமாரபாளையம் மாணவ, மாணவிகள்..

யோகாசனப் போட்டியில் பதக்கங்களை குவித்த குமாரபாளையம் மாணவ, மாணவிகள்..
X

யோகாசனப் போட்டியில் சாதனைப் படைத்த குமாரபாளையம் மாணவ, மாணவியருடன் பயிற்சியாளர் அரவிந்த்.

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான யோகா போட்டியில் குமாரபாளையத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பதக்கங்களை குவித்து சாதனைப் படைத்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் 3 ஆவது தேசிய அளவிலான யோகாசனப் போட்டிகள் நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு வயது பிரிவின் கீழ் மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில் குமாரபாளையம் அரவிந்த் யோகாசன பயிற்சி மையம் சார்பில் சட்டக் கல்லூரி மாணவர் உள்பட 8 பேர் பங்கேற்றனர். அவர்களில், சட்டக்கல்லூரி மாணவர் பரணிதரன், பவித்ரா, இனியா ஹர்சினி, ஹர்ஷிதா ஆகியோர் தங்கப் பதக்கமும், மினுப்ரியா வெள்ளிப் பதக்கமும், கிருத்திகா, யஸ்வந்த், லோகேஸ்வரன் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர்.


இதேபோல, ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச யோகாசன போட்டியில், சட்டக் கல்லூரி மாணவர் பரணிதரன், 5 ஆம் இடமும், இனியா ஹர்ஷினி, ஹர்னிஷா ஆகியோர் தங்கப் பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர். போட்டிகளில் பங்கேற்ற 8 பேரும் சாதனை படைத்த நிலையில், யோகாசன பயிற்சியாளர் அரவிந்தை இந்திய யோகாசன அமைப்பின் நிர்வாகி நீரஜ், இந்திய யோகா விளையாட்டு கூட்டமைப்பின் தமிழக பொது செயலராக பணியில் அமர்த்தினார்.

இதன் தொடர்ச்சியாக, குமாரபாளையத்தில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா பயிற்சியாளர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. வழக்கறிஞர் ஐயப்பன், விடியல் பிரகாஷ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மாணவ, மாணவிகளை வாழ்த்தினர்.

இதுகுறித்து விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பின் அமைப்பாளர் பிரகாஷ் கூறியதாவது:

சர்வதேச அளவில் குமாரபாளையத்தின் பெருமையை நிலை நாட்டி வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சியாளர் அரவிந்த் ஆகியோருக்கு வாழ்த்துகள். பயிற்சியாளர் அரவிந்த் கடந்த 2016 ஆம் ஆண்டு அரவிந்த் யோகா மையம் என்ற பயிற்சி மையத்தை தொடங்கி, திறமையான இளைஞர்களை உருவாக்கி, பல யோகா போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற பல இளைஞர்கள் தங்கப் பதங்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என விடியல் பிரகாஷ் தெரிவித்தார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil