தேசிய அளவிலான சிலம்பப்போட்டியில் குமாரபாளையம் மாணவர் தங்க பதக்கம்

தேசிய அளவிலான சிலம்பப்போட்டியில் குமாரபாளையம் மாணவர் தங்க பதக்கம்
X

தேசிய அளவிலான சிலம்பாட்டப்போட்டியில் தங்கம் வென்ற கவின்மதி நிலவன்.

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர் தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ராஜராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் காந்தி, 40, மணிமேகலை, 35. இவர்களது மகன் கவின்மதிநிலவன், 10, அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சிலம்பத்தில் மிகுந்த ஆர்வம் இருந்த தால் இவரை சிலம்ப பயிற்சி பெற வைத்தனர். இவரது அபார பயிற்சியினால் நன்கு தேர்ந்தார்.

இவரது மாஸ்டர் வெங்கடாசலம் இவரை பஞ்சாப் மாநிலம், அம்ரீஷ் என்ற இடத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வைத்தார். இந்திய அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 305 பேர் சென்றனர். இதில் 30 பேர் சிலம்ப வீரர்கள். 12 வயது பிரிவின் கீழ் போட்டியிட்டதில் இவர் முதல் பரிசும், தங்கபதக்கமும் பெற்று நம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

வீடு திரும்பிய இவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டினர். இவரது 10 வயது தம்பி குலசேகரகோமகன் சிலம்பம் பயின்று வருகிறார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்