குமாரபாளையம்: அம்மன் கோவில்களில் ஐப்பசி செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள்

ஐப்பசி செவ்வாய்க்கிழமை: சிறப்பு அலங்காரத்தில் குமாரபாளையம் காளியம்மன்
குமாரபாளையம் அம்மன் கோவில்களில் ஐப்பசி செவ்வாய்க்கிழமை நாளையொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
ஐப்பசி செவ்வாய்க்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu