29வது முறை இரத்ததானம் அளித்த குமாரபாளையம் சிவனடியார் திருநாணா சுப்பு

29வது முறை இரத்ததானம் அளித்த குமாரபாளையம் சிவனடியார் திருநாணா சுப்பு
X

என்.சுப்பிரமணி என்ற திருநாணா சுப்பு

ஆர்வத்துடன் இரத்த தானம் செய்துவரும் குமாரபாளையம் இளைஞர்கள். சுற்று வட்டார பகுதியில் யார் கேட்டாலும் உதவி செய்கின்றனர்.

குமாரபாளையத்தில் நாராயணன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்.சுப்பிரமணி என்ற திருநாணா சுப்பு. வயது 47, இன்று 29வது தடவையாக இரத்ததானம் அளித்துள்ளார்.

புகைப்பட கலைஞரான இவர் சிவாலய பணிகளில் ஆர்வத்துடன் பங்கெடுத்து தொண்டு செய்வதுண்டு. பல ஊர்களில் உள்ள சிவாலய திருப்பணிகளுக்கு ஆர்வத்துடன் பங்களிப்பை செய்துவருபவர். அத்துடன் சமூகத்திற்கு தன்னால் இயன்ற பணிகளையும் தொடர்ந்து செய்து வருபவர். இரத்ததான இயக்கத்தில் முனைப்பாக செயல்படுவதுடன், கேட்பவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் நேரடியாக ரத்ததானம் செய்து வருகின்றனர்.

47வது வயதில் 29 வது தடவை இரத்த தானம் செய்ததை பாராட்டிய போது, "எனது நண்பரும் புகைப்பட கலைஞருமான ஈரோட்டை சேர்ந்த மோனிகா சண்முகம் இதுவரை 85 தடவை இரத்த தானம் செய்துள்ளார், இப்படி நிறைய நண்பர்கள் நமது பகுதியில் இரத்த தானம் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். அவர்களுடைய பணி பாராட்டத்தக்கது என்று கூறினார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி