குமாரபாளையம் கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு: போலீசார் விசாரணை

குமாரபாளையம் கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு: போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை தீயணைப்பு நிலையம் அருகில் திருட்டு முயற்சி நடைபெற்ற தட்டச்சு பயிற்சி மையத்தில் கைரேகை நிபுணர் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை தீயணைப்பு நிலையம் அருகில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருபவர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஜகன்நாதன், 38. இவரது கடைக்கு அருகில் தட்டச்சு பயிற்சி மையம் நடத்தி வருபவர் தங்கமணி, 57.

இந்த இரு கடைகளின் அருகில் பேக்கரி கடை உள்ளது. நேற்று காலை 7 மணியளவில் இங்கு டீ குடிக்க வந்தவர்கள் இந்த இரு கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு வெளியில் கிடந்தது குறித்து, அந்தந்த கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

டூவீலர் மெக்கானிக் கடையில் டேபிள் டிராயரில் வைக்கப்பட்டு இருந்த 45 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டதாக அதன் உரிமையாளர் ஜகன்நாதன் கூறினார். அருகில் உள்ள தட்டச்சு கடையில் பணம் எதுவும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை.

இது குறித்து குமாரபாளையம் போலீசில் இருவரும் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!