குமாரபாளையம், பள்ளி பாளையம் பகுதியில் பிப். 20-ல் மின் நிறுத்தம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் பிப். 20ல் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகத்தின் பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் பிப். 20ல் (திங்கட்கிழமை)காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், வேமன் காட்டுவலசு,கோட்டைமேடு, சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர்,கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதே போல் பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப். 20ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
வெப்படை, பாதரை, இந்திரா நகர், ரங்கனூர் 4 ரோடு, புது மண்டபம், எலந்தகுட்டை, தாண்டான்காடு, கணபதி நகர், சின்னார்பாளையம், ஈ.காட்டூர், புதுமண்டபம், செம்பாறைக்காடு, தெற்கு பாளையம், மாதேஸ்வரன் கோயில், வெடியரசம்பாளையம், சின்னாக்கவுண்டம்பாளையம்,கலியனூர், மாம்பாளையம், மோள கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu