குமாரபாளையம் காவிரி கரையோரப் பகுதிகளில் சேலம் சரக டி.ஐ.ஜி. ஆய்வு

குமாரபாளையம் காவிரி கரையோரப் பகுதிகளில் சேலம் சரக டி.ஐ.ஜி. ஆய்வு
X

குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதிகளில் சேலம் சரக டி.ஐ.ஜி மகேஸ்வரி ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் காவிரி கரையோரப் பகுதிகளில் சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை நிரம்பியது. இதனையடுத்து, காவிரி கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சேலம் சரக டி.ஐ.ஜி மகேஸ்வரி, குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதியான மணிமேகலை தெரு, இந்திரா நகர், கலைமகள் தெரு, புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி, நகராட்சி நடராஜா திருமண மண்டபம் ஆகிய இடங்களை நேரில் ஆய்வு செய்தார்.

காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை, இருக்கும் வீடுகள் ஆகியன குறித்தும், இவர்கள் தங்க வைக்கப்படும் இடங்கள் குறித்தும், அங்கு தேவையான வசதிகள் செய்து தயார் நிலையில் உள்ளனவா? என்பது குறித்தும் சமூக பாதுகாப்பு திட தாசில்தார் சிவகுமாரிடம் கேட்டறிந்தார்.

திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ரவி, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil