குமாரபாளையம்: பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு

குமாரபாளையம்:  பள்ளிகளில்  பெற்றோர் ஆசிரியர் கழக  நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு
X

குமாரபாளையம் திமுக நகர பொறுப்பாளர் செல்வம்.

தமிழக முதல்வர் ஒப்புதலுடன் , மாவட்ட செயலர் மூர்த்தி வழிகாட்டுதல் படி நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனர்

குமாரபாளையத்தில் பல்வேறு பள்ளிகளில் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

இது பற்றி திமுக நகர பொறுப்பாளர் செல்வம் கூறியதாவது:-

திமுக ஆட்சி பதவியேற்றவுடன், அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளாக, திமுகவினர் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெங்கடேசன், மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரவி, சின்னப்பநாயக்கன் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சீனிவாசன், சுந்தரம் காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பெருமாள் ஆகியோர் பெற்றோர் ஆசிரிய கழக தலைவர்களாக தமிழக முதல்வர் ஒப்புதலுடன் , மாவட்ட செயலர் மூர்த்தி வழிகாட்டுதல் படியும் நியமனம் செய்யப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர் என்றார்.

Tags

Next Story
ai based agriculture in india