குமாரபாளையம் திமுக, அதிமுக சார்பில் பொங்கல் விழா
குமாரபாளையம் தெற்கு தி.மு,க. சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தெற்கு நகர தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் ஞானசேகர் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் தெற்கு நகரத்திற்கு உட்பட்ட 16 கிளைக் கழகங்களிலும் கொடியேற்றி சமுத்துவ பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு கரும்பு மற்றும் பொங்கல் வழங்கி கொண்டாடினார்கள். விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொருளாளர் .ராஜாராம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரவி, செல்வகுமார், தர்மராஜ், தேவி, முன்னாள் நகர செயலாளர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில் நடந்த பொங்கல் விழாவில் நகர பொறுப்பாளரும், நகராட்சி தலைவருமான விஜய்கண்ணன் தலைமை வகித்தார். பொதுமக்களுக்கு, சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு விழா நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் வெங்கடேசன், செந்தில்குமார், அழகேசன், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் மாற்றுக்கட்சியிலிருந்து கட்டுமான தொழிலாளர்கள் 200 நபர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
தி.மு.க.வின் வளர்ச்சி திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் எடுத்து சொல்லி, மாவட்ட செயலர், நகர செயலர்கள் முயற்சியின் பேரில் பல்வேறு பகுதியில் மாற்றுக்கட்சியியனர் தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலர் மதுரா செந்தில் தலைமையில், கட்டுமான தொழிற்சங்கத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அவர்கள் இதுவரை இருந்த கட்சியை விட்டு, கட்டுமான சங்க நிர்வாகி தி.மு.க.வில் இணைந்தனர். இதில் நகர செயலரும், நகராட்சி தலைவருமான விஜய்கண்ணன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட பொருளர் ராஜாராம், முன்னாள் நகர செயலர் செல்வம், தொழிலாளர் அணி துணை தலைவர் அழகேசன், துணை அமைப்பாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. சார்பில் பொங்கல் விழா
அ.தி.மு.க கழகத்தின் சார்பில் குமாரபாளையம் நகரத்திற்கு உட்பட்ட வெள்ளிசந்தை, சின்னப்பநாயக்கன்பாளையம், வேதாந்தபுரம், பஸ் ஸ்டாண்ட்,அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியேற்று விழா, பொங்கல் விழா, எம்ஜிஆர் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும் நாமக்கல் மாவட்ட கழக செயலாளருமான தங்கமணி பங்கேற்று, கொடியேற்றி வைத்தும், எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கினார்
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், பொதுச்செயலாளர் அறிவித்தலின் படி, குமாரபாளையம் நகர பகுதிகளில், கட்சி கொடியேற்று விழா, , பொங்கல் விழா, எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மூன்று ஆண்டு காலத்தில் தி.மு.க ஆட்சியின் மக்கள் விரோத போக்கை எடுத்துச் சொல்லும் வகையிலும், அதே போல மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வால், விசைத்தறிகள் மட்டுமில்லாமல் எந்த தொழிலும் செய்ய முடியாத நிலை உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.குமாரபாளையம் பகுதியை பொறுத்தவரையில் விசைத்தறிகள் அதிகம் உள்ள பகுதி. விசைத்தறி தொழில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். இதனால் விசைத்தறி தொழிலே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் குமாரபாளையம் பகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதைவட மின் கம்பி புதைக்கும் பணிகள் 50 சதவீததற்கும் மேல் பணிகள் முடிக்கப்பட்டது. . கடந்த அ.தி.மு.க ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போதும், எடப்படியார் இருந்த போதும் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இப்போது உள்ள தி.மு.க ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் கஷ்டப்பட்டு கொண்டுள்ளனர்.
மேலும் ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் தருவதாக கூறிவிட்டு 27 மாதத்திற்கு பிறகு இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வர உள்ளதால், தற்போது 50 சதவீத பேருக்கு கொடுத்து உள்ளார்.
ஜெயலலிதா மற்றும் எடப்படியார் இருவரும் தேர்தல் வாக்குறுதிகள் என்று கொடுத்துவிட்டால் அதனை முழுமையாக கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் கொடுத்தார்கள் ஆனால் அந்த திட்டங்கள் அனைத்தும் இந்த ஆட்சியில் வழங்கப்படவில்லை.
இன்னும் இரண்டு மாத காலத்தில் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் சிறப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இதில் நகர செயலர் பாலசுப்பிரமணி, கவுன்சிலர்கள் பழனிசாமி, புருஷோத்தமன், நிர்வாகிகள் திருநாவுக்கரசு, அர்ச்சுனன், ரவி, உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu