ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய குமாரபாளையம் போலீஸ்  இன்ஸ்பெக்டர் தவமணி
X

குமாரபாளையம் ஆதரவற்றோர் மைய முதியவர்களுக்கு குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி மதிய உணவு வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

குமாரபாளையம் ஆதரவற்றோர் மைய முதியவர்களுக்கு குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் மதிய உணவு வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

குமாரபாளையத்தில் ஆதரவற்றோர் மைய முதியவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிய உணவு வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

குமாரபாளையம் பாசம் ஆதரவற்றோர் மையத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கியதுடன், அவர்களுடன் அமர்ந்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி உணவருந்தினார். மேலும் அவர்களை மனம் விட்டு பேச வைத்து, விரும்புபவர்களை அவர்களின் குடும்பத்தாருடன் சேர்த்து வைக்க முயற்சி செய்வதாகவும் கூறினார். மையத்தை பார்வையிட்டு தேவையான உதவிகள் செய்வதாக கூறினார்.

இதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக குமாரபாளையத்தில் உள்ள பாசம் ஆதரவற்றோர் மையத்தில் கணவரிடம் பிரிந்து வந்த மனைவி, இரு மகள்கள் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இது குறித்து மைய அமைப்பாளர் குமார் கூறியதாவது:-

லட்சுமி (வயது36,) லத்திகா ஸ்ரீ,(12, )மது ஸ்ரீ,( 7,) என்ற மூவர், சங்ககிரி காவல் நிலையத்தில் கணவனால் கைவிடப்பட்டதாக கூறி புகார் அளித்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவியிடம் கேட்டனர். இவர்களை போலீஸ் தரப்பில் குமாரபாளையம் பாசம் இல்லத்தில் இரண்டு நாட்கள் தங்குவதற்கு அனுமதி கேட்டார்கள். பாசம் அமைப்பின் சார்பாக அவர்கள் தங்குவதற்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இரண்டு நாள் கழித்து அந்தப் பெண்ணும் குழந்தைகளும் கணவனுடன் செல்ல விருப்பமில்லை என்ற தெரிவித்த காரணத்தினால், சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் அனுமதியுடன்அந்த பெண்ணின் உறவினர்கள் கோவையில் இருந்து நேரில் வந்து, பெண்ணையும், இரு பெண் குழந்தைகளையும் அழைத்து சென்றனர்.

இவ்வாறு குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி கூறினார்.

Tags

Next Story