குமாரபாளையம் காவல் நிலைய பெயர் பலகை மாற்றம்: போலீசார் அதிரடி

குமாரபாளையம் காவல் நிலைய பெயர் பலகை மாற்றம்: போலீசார் அதிரடி
X

குமாரபாளையம் காவல் நிலையத்தில் மாற்றி அமைக்கப்பட்ட பெயர் பலகை.

தமிழக டி.ஜி.பி., உத்திரவின்படி, குமாரபாளையம் காவல் நிலையத்தில் உள்ள பெயர் பலகை மாற்றியமைக்கப்பட்டது.

சென்னை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இருந்தால் அதனை அகற்ற உத்திரவிட்டார். அதன்படி குமாரபாளையம் காவல் நிலையத்தில் தனியார் நிறுவன பெயர் அகற்றப்பட்டு புதிய போர்டு வைக்கப்பட்டது.

இது பற்றி இன்ஸ்பெக்டர் ரவி கூறுகையில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர் இருந்தது. காவல் துறை தலைமை அலுவலக உத்திரவை நிறைவேற்றும் விதத்தில் அந்த தனியார் நிறுவனத்தின் பெயர் அகற்றப்பட்டு புதிய பெயர் பலகை அமைக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!