குமாரபாளையத்தில் தவற விட்ட 6 பவுன் நகையை, எடுத்த நபரிடமிருந்து மீட்ட போலீசார்!
தவற விட்ட 6 பவுன் நகையை, எடுத்த நபரிடமிருந்து போலீசார் மீட்டு சாதனை
குமாரபாளையத்தில் தவற விட்ட 6 பவுன் நகையை, எடுத்த நபரிடமிருந்து குமாரபாளையம் போலீசார் மீட்டு சாதனை படைத்துள்ளனர்.
பெங்களூரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு, 35. தனியார் நிறுவன மேலாளர். இவரும் இவரது துணைவியாரும், டிச. 7ல் கோவையில் உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, பெங்களுர் திரும்பும் வழியில், குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் பகுதியில் உள்ள சரவணபவன் ஓட்டலில் சாப்பிட செல்லும் போது, மடியில் வைத்திருந்த ஆறு பவுன் தங்க நகையை கீழே தவற விட்டு சாப்பிட சென்றனர். சாப்பிட்டு விட்டு காரில் சேலம் வரை சென்ற பிறகு, மடியில் வைத்திருந்த நகையை தாவர விட்டது நினைவுக்கு வார, திரும்ப அதே ஓட்டலுக்கு வந்தனர். அங்கு நகை எங்கும் இல்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் இது குறித்து வழக்குபதிவு செய்து, நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, இவர்கள் கார் அருகே கீழே கிடந்த நகையை ஒருவர் எடுத்தது தெரியவந்தது. நகையை எடுத்தவர் சாப்பிட்டுவிட்டு ஒரு காரில் ஏறி சென்றார். அந்த கார் பற்றிய விபரம் சொல்லி, சங்ககிரி அருகே உள்ள டோல்கேட்டில் விசாரணை செய்து, கார் நெம்பர் கண்டுபிடித்தனர். அதன் உரிமையாளரை தெரிந்து, வர சொன்னபோது, அவர் மறுத்தார். குமாரபாளையம் போலீசார் பெங்களூரில் அவர் இருக்கும் அக்கிப்பள்ளி பகுதியில் உள்ள போலீசார் மூலமாக, போலீஸ் ஸ்டேஷன் வரவழைத்தனர். அவர் நகையை ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் அவர் பெயர் ஹரிபிரசாத், 24, எம்.பி.அயே.பட்டதாரி என்பதும், விவசாய பனி செய்து வருவதும் தெரியவந்தது. நகையை மீட்ட போலீசார், நகையை உரியவரிடம் ஒப்படைத்தனர். இதற்கு பிரதிஉபகாரமாக, நகையின் உரிமையாளர் ரமேஷ்பாபு, குமாரபாளையம் போலீசாருக்கு நான்கு சி.சி.டி.வி. கேமரா வாங்கி கொடுப்பதாக கூறினார். மேலும், நகை கிடைக்க உதவி செய்த இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், போலீசார் மணிகண்டன், மருதமுத்து ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu