குமாரபாளையம் காவிரி ஆற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

குமாரபாளையம் காவிரி ஆற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட  போலீசார்
X

குமாரபாளையம் காவிரி பாலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர். 

குமாரபாளையம் காவிரி ஆற்று பாலத்தின் மீது இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. காவிரி பாலத்தின் மீது செல்லும் பொதுமக்கள் கூடி நின்று வேடிக்கை பார்ப்பதும், மொபைல் போனில் போட்டோ எடுப்பதும், பாலத்தின் மீது இருந்து காவிரி வெள்ளத்தில் குதிப்பதுமாக அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து கட்டுப்படுத்தும் விதமாக குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் காவிரி பாலத்தின் மீதும், கரையோர பகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
மக்களின் உயர்தர மருத்துவ சேவைக்கான முன்முயற்சி - நாமக்கல் ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்