குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணிக்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஆறுதல்

குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணிக்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஆறுதல்
X

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணிக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி  ஆறுதல் கூறினார். 

குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணிக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணிக்கு எம்.பி.,. எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

குமாரபாளையம் அருகே கேரளா எ.டி.எம். கொள்ளை நபர்களை பிடிக்கும் சம்பவத்தில் பலத்த காயமடைந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, பரமத்தி எஸ்.ஐ. ரஞ்சித் ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி, எம்.எல்.ஏ. ஈஸ்வரன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் செல்வம், தி.மு.க. கவுன்சிலர் சத்தியசீலன், மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள் சித்ரா, உஷா, உள்பட பல முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மேலும் பல முக்கிய பிரமுகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!