ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை
X

குமாரபாளையம்  போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி.

குமாரபாளையம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆலோசரனை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ரவி கூறும்போது

ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கியவர்களை சில தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர் விருப்பமில்லாமல் சேர்ப்பதாக புகார்கள் வந்தன. இதையொட்டி அம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. விபத்தில் சிக்கியவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் போன்றவர்கள். அந்த சமயத்தில் பணம் தான் பெரிது என செயல்பட வேண்டாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சேர்த்து மேலும் அவருக்கு மேலும் துன்பத்தை தரக்கூடாது. அவர்கள் விருப்பப் பட்டால் அழைத்து செல்லலாம். நோய்வாய் பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், உயிருக்கு போராடுபவர்கள் என இது போன்ற நபர்களிடம் வாடகையை நியாயமாக கேட்டு பெறுங்கள். இது போன்ற அறிவுறுத்தல்கள் அம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு வழங்கபட்டது என்றார்.

இந்த கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் மலர்விழி, இளங்குமரன், சிவகுமார், உடனிருந்தனர். அம்புலன்ஸ் ஓட்டுனர்கள் பிரகாஷ், யுவராஜ், கார்த்தி, சந்தோஷ்குமார், தர்மராஜ், மணி, ராஜ்குமார், வினோத்குமார் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!