குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணியினர் நகராட்சி கமிஷனரிடம் மனு
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம் மனு கொடுக்கப்பட்டது.
குமாரபாளையம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, காந்திபுரம் சாலை, இடைப்பாடி சாலையில் காவேரி நகர் பஸ் நிறுத்தம் பகுதி, விட்டலபுரி பகுதி, ஐயன் தோட்டம், தம்மண்ணன் சாலை, நாராயண நகர், அம்மன் நகர், நடராஜா நகர், அம்மன் நகர், திருவள்ளுவர் வீதி, உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வேகத்தடைகள் மீது வெள்ளை பெயிண்ட் அடிக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் அமைக்க வேண்டும். பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் பிரிவு, கத்தேரி பிரிவில் குமாரபாளையம் நுழைவுப்பகுதி ஆகிய இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும். கடும் வெயில் காலம், மழைக்காலங்களில் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது.
இது பற்றி மாநில மகளிரணி தலைவி மூகாம்பிகாவிடம், நகர மகளிரணி நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இது குறித்து மூகாம்பிகா அறிவுறுத்தல்படியும், மாவட்ட செயலர் காமராஜ் வழிகாட்டுதல்படியும், நகர மகளிரணி செயலர் சித்ரா தலைமையில், நிர்வாகிகள் ரேவதி, உஷா, சுஜாதா, ஜெயந்தி, தாமோதரன் உள்ளிட்ட பலர் வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்க வேண்டும், பஸ் ஸ்டாண்ட் இருக்கைகள், நிழற்கூடங்கள் அமைத்து தர வேண்டி குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம் மனு கொடுத்தனர்.
இது பற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சசிகலா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu