குமாரபாளையம் -அய்யன்தோட்டம் பகுதியில் வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை

குமாரபாளையம் -அய்யன்தோட்டம் பகுதியில் வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை
X
கிளை வீதியில் இருந்து வரும் பிரதான வீதியில் வரும் வாகனங்கள் , பிற வாகனங்களுடன் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது

குமாரபாளையம் அய்யன் தோட்டம் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் அய்யன் தோட்டம் பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றும் வகையில் தற்போது புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பழ வீதிகள் உள்ளன. ஒவ்வொரு வீதியிலும் கார்கள், டூவீலர்கள் அதிகம் உள்ளன.

முன்பு ஒவ்வொரு வீதியின் முன்பும் பிரதான சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. எந்தவொரு வீதியில் இருந்து எந்த வாகனம் வந்தாலும், வேகத்தடை இருந்ததால் நிறுத்தி, நிதானமாக வரும் நிலை இருந்து வந்தது. இதனால் விபத்து அபாயம் இல்லாமல் இப்பகுதி மக்கள் நடமாடி வந்தனர். தற்போது அமைத்துள்ள புதிய சாலையில் எந்தவொரு இடத்திலும் வேகத்தடை இல்லை.

இதனால் கிளை வீதியில் இருந்து வரும் வாகனங்கள் பிரதான வீதியில் வரும் போது, பிற வாகனங்களுடன் மோதி விபத்து ஏற்பட்டு வரும் நிலை உள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிரிழப்பு, பெரும் விபத்து போன்ற அசம்பாவிதம் ஏற்படும் முன்னதாகவே இச்சாலையில் ஏற்கெனவே இருந்ததைப் போல வேகத்தடை அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


Tags

Next Story