குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் சிறப்பு பஜனை நிகழ்ச்சி துவக்கம்

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் சிறப்பு பஜனை நிகழ்ச்சி துவங்கியது.
குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் சிறப்பு பஜனை நிகழ்ச்சி துவங்கியது.
குமாரபாளையம் பாண்டுரங்கர் திருக்கோவில் மற்றும் ஈரோடு விட்டல் பக்தர்கள் குழு சார்பில் வாரகரி சம்பிரதாய ஹரிகீர்த்தன் 7ம் ஆண்டு பக்த விஜயம் நடந்தது. இதில் துகாராம் கணபதி மகராஜ், ரகுநாத் தாஸ் மகராஜ் இருவரும் பாடும், ஞானேஸ்வரி பாராயணம், காதா பஜன், ஞானேஸ்வரி ப்ரவசன், காலா கீர்த்தன், கிருஷ்ணா லீலா எனும் மூன்று நாட்கள் சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடந்தது.
சேலம் சங்கரதாஸ் குழுவினர் சார்பில் ருக்மினி கல்யாணம், ஆஞ்சநேயர் உத்ஸவம் பஜனை பாடல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்த பஜனை நிகழ்ச்சி காலை 09:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த பஜனை நிகழ்ச்சியில் பெருமாள் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பெருமாள் வழிபாடு குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது:-
பெருமாள் கோவிலில் கோபுரம் இருப்பின் காலணிகளை கழற்றி விட்டு கோபுரத்தை தலை நிமிர்ந்து கைகளை தலை மேல் உயர்த்தி கலசங்களை கண்டு வணங்க வேண்டும்.
பின்பு கோவிலுக்குள் சென்று கொடி மரம் அல்லது பலிபீடத்தின் அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். இதன் பின்னர் உள்ளே சென்று ஸ்ரீ கருடன் சந்நிதியில் ஸ்ரீ கருடனை தரிசிக்க வேண்டும். அதையும் கடந்து ஜெய விஜய துவார பாலகர்களை வணங்கி பெருமாளை தரிசிக்க உள்ளே செல்ல வேண்டும். உள்ளே பெருமாளை தரிசிக்கும் நேரம் மௌனமாக பெருமாளின் திருவடி முதல் திருமுடி வரை கண்களால் கண்டு ரசித்து மனதுக்குள் தியானித்து பெருமாளுக்கு செய்யும் ஆரத்தியை கண்ணாரக்கண்டு வணங்க வேண்டும்.
கொடிமரம் தாண்டிய பின்னர் கைகளை தலைக்கு மேல் உயர்த்த கூடாது. கைகளை மார்பிலிருந்து மூக்கு நுனி வரை மட்டுமே கொண்டு செல்லலாம். தீபாராதனை முடிந்த பின்னர் தீர்த்தம், சடாரி மற்றும் துளசி போன்ற பிரசாதங்கள் கொடுத்தால் வாங்கிக்கொண்டு சந்நிதியை நிதானமாக ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பின்னர் வெளியேறவும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu