குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் ஆசாட சுத்த சயன ஏகாதசி விழா

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில்   ஆசாட சுத்த சயன ஏகாதசி விழா
X

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் நடைபெற்ற ஆசாட சுத்த சயன ஏகாதசி விழாவையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் ஆசாட சுத்த சயன ஏகாதசி விழா நடைபெற்றது.

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் ஆசாட சுத்த சயன ஏகாதசி விழாவையொட்டி ஜூலை 9ல் கொடியேற்றுவிழா, ஜூலை 10ல் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி, பஜனை, கோஷ்டி நர்த்தனம் நடைபெற்றது. நேற்று காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல், கருட தரிசனம், சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. கோவில் வளாகம் முழுதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்/

Tags

Next Story