சிவராத்திரியை முன்னிட்டு குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சிவராத்திரியை முன்னிட்டு குமாரபாளையம்  கோவில்களில் சிறப்பு வழிபாடு
X

சிவராத்திரி நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

சிவராத்திரி நாளையொட்டி குமாரபாளையம், பவானி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சிவராத்திரி நாளையொட்டி குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விச்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில் சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், வேதகிரீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அங்காளம்மன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்களுக்கு கோவிலுக்கு வெளியில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai future project