குமாரபாளையம்: தளிர் விடும் பாரதம் சார்பில் செவிலியர் தினவிழா கொண்டாட்டம்

குமாரபாளையம்: தளிர் விடும் பாரதம் சார்பில் செவிலியர் தினவிழா   கொண்டாட்டம்
X

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் செவிலியர் தினவிழா தளிர்விடும் பாரதம் சார்பில் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் சார்பில் செவிலியர் தினவிழா சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தலைவர் சீனிவாசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. டாக்டர் சுதாக்கொடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். செவிலியர்கள் அனைவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சீனிவாசன் பேசும்போது கடவுளுக்கு இணையாக கருதப்படும் மருத்துவர்களோடு உதவியாக பணியாற்றுவதோடு, தாயுள்ளத்துடனும், கருணையுடனும், பணியாற்றி, முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவதில் நிகர் செவிலியர்களே என்றார். வரதராஜ், மோகன்ராஜ், செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!