காலை முதல் மேக மூட்டம், வெயில் இல்லாததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
காலை முதல் மேக மூட்டம், வெயில் இல்லாததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
குமாரபாளையத்தில் நேற்று காலை முதல் மேக மூட்டமாகவும், வெயில் இல்லாததாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஏப்ரல், மே மாத 15 தேதி வரை, கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. அதன் பின் மழைக்காலம் வந்தது. கர்நாடக பகுதியில் கூட அதிக மழை பெய்ததால், காவிரியில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் ஜூலை மாதம் முதல் திறக்கப்பட்ட தண்ணீர், ஜன. 17ல் நிறுத்தப்பட்டது. தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேலான விவசாய நிலங்களில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் நெற்பயிர்கள் பயிரிட்டு பலனடைந்தனர். பருவ மழை காலம் என்பதால், சில நாட்களாக வெயில் இருந்த நிலையில், நேற்று காலை முதல் வெயில் இல்லாமலும், மேக மூட்டமாகவும் இருந்ததால், பொதுமக்கள் குளிர்ச்சியான சூழ்நிலையால் மகிழ்ச்சியடைந்தனர். தினமும் வெயிலில் வாடி வந்த சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu