பிப். 1ல் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்

குமாரபாளையத்தில் பிப். 1ஆம் தேதிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டது

பிப். 1ல் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம் - குமாரபாளையத்தில் பிப். 1ஆம் தேதிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை, சில நாட்கள் முன்பு, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. வசந்தி, டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் தவமணி, தாசில்தார் சிவகுமார் உள்ளிட்ட பலர், வாடிவாசல் அமைக்கும் இடம், மாடுகள் கட்டப்படும் இடம், வரிசையாக மாடுகள் கொண்டு செல்லும் இடம், உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து ஆலோசனை கூறினார்கள். பிப். 2ல் நடப்பதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள், போலீசார் பாதுகாப்பு பணிகள் காரணமாக, பிப். 1ல் நடக்கவுள்ளது. இது குறித்து குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார் கூறியதாவது:

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பிப். 2 மற்றும் 3ம் தேதிகளில் நாமக்கல் அருகே கோவில் விழா இருப்பதால், அங்கு பாதுகாப்பு பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட வேண்டும். பிப். 2ல் ஜல்லிக்கட்டு நடந்தால், அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் நியமிக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் பிப். 1ல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திக்கொள்ள போலீசார் கேட்டுகொண்டதின் பேரில், பிப். 1ல் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!