போதை நபர் கிணற்றில் தவறி விழுந்து பலி

குமாரபாளையத்தில் போதை நபர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

போதை நபர் கிணற்றில் தவறி விழுந்து பலி - குமாரபாளையத்தில் போதை நபர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

குமாரபாளையம் அருகே கோட்டமேடு பகுதியில் வசிப்பவர் மணி, 28, சுமை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் மாலை 06:00 மணியளவில் கோட்டைமேடு பகுதியில் குடி போதையில் போவோர், வருவோர் வசம் சண்டை போட்டுக்கொண்டு இருந்துள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தாரிடம் வீணாக சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அருகே இருந்த ஓட்டல் கடைக்காரர், அந்த குடும்பத்தினரை தன கடைக்குள் அழைத்து பாதுகாப்பாக இருக்க சொன்னார். சிறிது நேரத்தில் அங்கு வந்த குமாரபாளையம் போலீசார், மணியிடம் அமர சொல்லி விட்டு, அந்த குடும்பத்தார் வசம் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்து எழுந்து ஓடிய மணி, அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டார். இது குறித்து மணியின் அண்ணன் சூர்யா குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs