கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
X
குமாரபாளையத்தில் அருகே கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது

குமாரபாளையத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் அருகே கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தட்டான் குட்டை ஊராட்சியில் வீரப்பம்பாளையம் பகுதியில் நடந்தது. இதில் வீரப்பம்பாளையம், சின்னாயக்காடு, நல்லாம்பாளையம், வீ. மேட்டூர், சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர் உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 250 க்கும் மேற்பட்ட மாடுகள், எருமைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டன. இது குறித்து கால்நடை மருத்துவர் செந்தில்குமார் கூறியதாவது:

பருவமழை காலத்தில் கோமாரி நோய் வராமல் இருக்க, தடுப்பூசி போடப்படுவது வழக்கம். இந்த முகாமில் பல பகுதியிலிருந்து விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் கால்நடைகளுடன் வந்து, தடுப்பூசி போட வைத்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தடுப்பூசி பணியாளர் ராஜேந்திரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் செல்வலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் அருகே கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தட்டான் குட்டை ஊராட்சியில் வீரப்பம்பாளையம் பகுதியில் நடந்தது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்