எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற  முன்னாள் அமைச்சர்
X
குமாரபாளையத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்றார்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்

குமாரபாளையத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்றார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி குமாரபாளையம் நகரம் மற்றும் ஒன்றிய பகுதியில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா நகர செயலர் பாலசுப்ரமணி, ஒன்றிய வடக்கு செயலர் குமரேசன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று அனைத்து பகுதியிலும் கட்சிக்கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் தங்கமணி பேசியதாவது:

தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் நலன் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில், இடைப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மலரும். சட்டம் ஒழுங்கு சீர்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிர்வாகிகள் திருநாவுக்கரசு, குமணன், தனபால், முருகேசன், வரதராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டம்..!