குமாரபாளையத்தில் கோலாகல பொங்கல் விழா
குமாரபாளையத்தில் கோலாகல பொங்கல் விழா
குமாரபாளையத்தில் பொங்கல் விழா. ரேக்ளா குதிரை மற்றும் மாட்டு வண்டி ஊர்வலத்துடன் வெகு விமரிசையாக நடந்தது.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் தமிழகமெங்கும் இன்று வெகு சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், குமாரபாளையம் நகர திமுக சார்பில் நடந்தது. . நகரமன்ற தலைவர் விஜய கண்ணன் தலைமையில், குளத்துக்காடு பகுதியில் இருந்து தமிழக பாரம்பரியமிக்க மாட்டு வண்டிகளில் பெண்களும், ரேக்ளா குதிரை வண்டிகளில் ஆண்களும் அமர்ந்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலமானது சேலம் மெயின் ரோடு பள்ளிபாளையம் பிரிவு சாலை மற்றும் எடப்பாடி சாலை வழியாக குமாரபாளையம் காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் மைதானத்தில் முடிவடைந்தது. பின்னர் அங்கு பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மியூசிக் சேர் மற்றும் உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் சி.பி.ஐ. சார்பில் நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில் பொங்கல் விழா கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் பொங்கல் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் கலைமகள் வீதியில் பொங்கல் விழா அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் வைக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நடந்த பொங்கல் விழாவையொட்டி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் அழகேசன் ஆகியோர் ரேக்ளா வண்டியில் ஊர்வலமாக வந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu