திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம்
திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம் - குமாரபாளையத்தில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பாக திருவள்ளுவர் தினம் அமைப்பாளர் பிரகாஷ், ஆயிரத்து 330 குறட்களும் இசை வடிவில் பாடிய பங்கஜம் தலைமையில் நடந்தது. பேராசிரியை விஜயலட்சுமி திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தார் திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு சூர்யா கார்மெண்ட்ஸ் கோபாலகிருஷ்ணன், அவரது துணைவியார் மகாலட்சுமி, சரவணன், ஜமுனா, சண்முகம், பாண்டியன், கராத்தே மாஸ்டர் பன்னீர்செல்வம், உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ஒரு திருக்குறள் சொல்லி மலர்கள் தூவி, மலரஞ்சலி செலுத்தினர். மூன்று வயது இரு குழந்தைகள் தலா 10 திருக்குறள் ஒப்புவித்தனர். 30கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் தலா 50 திருக்குறள் ஒப்புவித்தனர். பரமன் பாண்டியன் திருக்குறள் ஒப்புவிப்பு போட்டியை துவங்கி வைத்தார்.
திருக்குறள் ஒப்புவித்த குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. திருவள்ளுவர் சிலையை குமாரபாளையத்தில் விரைவில் அமைப்பது என ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது. சூர்யா கார்மெண்ட்ஸ் சார்பாக அதன் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் 5 ஆயிரம் ரூபாய் வழங்கி திருப்பணியை துவக்கி வைத்தார்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பாக திருவள்ளுவர் தினம் அமைப்பாளர் பிரகாஷ், ஆயிரத்து 330 குறட்களும் இசை வடிவில் பாடிய பங்கஜம் தலைமையில் நடந்தது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu