சவுண்டம்மன் திருவிழா, ஜோதி வடிவிலான அம்மனை கத்தி போட்டவாறு அழைத்து வந்த வீரகுமாரர்கள்
சவுண்டம்மன் திருவிழா, ஜோதி வடிவிலான அம்மனை கத்தி போட்டவாறு அழைத்து வந்த வீரகுமாரர்கள்
குமாரபாளையம் சவுண்டம்மன் திருவிழாவில் நடந்த ஜோதி அழைப்பு வைபவத்தில் வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர்.
குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜன. 3ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு முடிந்த நிலையில் நேற்று ஜோதி வடிவிலான அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் அம்மனை வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு அழைத்து வந்தனர். கோவில் வளாகத்தில் துவங்கிய திருவீதி உலா, திருவள்ளுவர் வீதி, ஜே.கே.கே.சாலை, தம்மண்ணன் சாலை, புத்தர் வீதி, சேலம் சாலை, ராஜா வீதி வழியாக கோவிலில் நிறைவு பெற்றது. வழி நெடுக பக்தர்கள் பெருமளவில் கூடி நின்று அம்மனை வணங்கினர். பேண்டு இசைக்கு தகுந்தாற்போல் வீரகுமாரர்கள் கத்தி போட்டு வந்தது அனைவரையும் ரசிக்க வைத்தது. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பண்டாரம் எனப்படும் மஞ்சள் தூள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று காலை மஞ்சள் நீர் திருவீதி உலா, இரவு மலர்களால் அலங்கரிக்கபட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகியன நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
படவிளக்கம் :
குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மன் வாராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu