சவுண்டம்மன் கோவிலில் சக்தி அழைப்பு வைபவம்

குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று மாலை காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைப்பு வைபவம் நடந்தது.

சவுண்டம்மன் கோவிலில் சக்தி அழைப்பு வைபவம்

குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று மாலை காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைப்பு வைபவம் நடந்தது.

குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜன. 3ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று மாலை காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைப்பு வைபவம் நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தவாறு வந்தார். காவிரி ஆற்றிலிருந்து கலைமகள் வீதி, சேலம் சாலை, புத்தர் வீதி, தம்மண்ணன் வீதி வழியாக ராஜ வீதியில் உள்ள கோவில் வரை, வீரகுமாரர்கள் அம்மனை கத்தி போட்டவாறு அழைத்து வந்தனர். வழி நெடுக பக்தர்கள் பெருமளவில் கூடி நின்று அம்மனை வணங்கினர். பேண்டு இசைக்கு தகுந்தாற்போல் வீரகுமாரர்கள் கத்தி போட்டு வந்தது அனைவரையும் ரசிக்க வைத்தது. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பண்டாரம் எனப்படும் மஞ்சள் தூள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று காலை காவிரி ஆற்றிலிருந்து சாமுண்டி அழைப்பு, மாலை பெரிய பொங்கல் விழா, ஜன. 15 இரவு ஜோதி திருவீதி உலா, ஜன. 16ல் காலை மஞ்சள் நீர் திருவீதி உலா, இரவு மலர்களால் அலங்கரிக்கபட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகியன நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

படவிளக்கம் :

குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

படவிளக்கம் :

குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று மாலை காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைப்பு வைபவம் நடந்தது. இதில் வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business