20 சதவீத போனஸ் வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

20 சதவீத  போனஸ் வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
X
குமாரபாளையத்தில் 20 சதவீத போனஸ் வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

20 சதவீத போனஸ் வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் 20 சதவீத போனஸ் வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில்

20 சதவீத போனஸ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் அசோகன் தலைமை வகித்தார். நகர செயலர் பாலுசாமி பேசியதாவது:

விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் உத்திரவாதம் என்பது இதுவரை நிர்ணயம் செய்யப்படுவது இல்லை. 2024ம் ஆண்டுக்கு 20 சதவீதம் போனஸ் கேட்டு கோரிக்கை வைப்பது என, சிறப்பு பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயாளர் வேலுசாமி, மாவட்ட தலைவர் மோகன், சிறப்பு மாவட்ட குழு உறுப்பினர்கள் தனபால், வெங்கடாசலம், நகர பொருளர் வெங்கடேசன், நகர துணை தலைவர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் : குமாரபாளையத்தில் 20 சதவீத போனஸ் வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

Tags

Next Story