குமாரபாளையம் நடராஜாநகர் ஜெபமாலை அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி அனுசரிப்பு

குமாரபாளையம் நடராஜாநகர் ஜெபமாலை அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி அனுசரிப்பு
X

குமாரபாளையம் நடராஜா நகர் புனித ஜெபமாலை அன்னை தேவாலயம் சார்பில் புனித வெள்ளி தினத்தையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் சிலுவையை கவுன்சிலர் ஜேம்ஸ் சுமந்து வந்தார்.

குமாரபாளையம் தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இயேசு சிலுவையில் உயிர் நீத்த தினம் புனித வெள்ளியாக கிறிஸ்தவ மதத்தினரால் கடைபிடிக்கப்படுகிறது. அதேபோல் இயேசு உயிர்தெழுந்த 3ம் நாள் ஈஸ்டர் சண்டே என கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நடராஜா நகர் புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் புனித வெள்ளி தினம் தேவாலய தந்தை துரைசாமி தலைமையில் அனுசரிக்கப்பட்டது. சிலுவையை சுமந்தவாறு ஒருவர் முன்னால் வர, கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் இயேசுவின் புகழ்பாடும் பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக வந்தனர். தேவாலயத்தில் தொடங்கிய ஊர்வலம் நகரின் பல பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் தேவலாயத்தில் நிறைவு பெற்றது. அதன் பின் ஆராதனை நடைபெற்றது. நாளை மறுநாள் ஈஸ்டர் சண்டே கொண்டாடப்படவுள்ளது.

Tags

Next Story