சொத்துவரி இலக்கை எட்டிய ஊழியர்களுக்கு பாராட்டு,

சொத்துவரி இலக்கை எட்டிய ஊழியர்களுக்கு பாராட்டு,
நீரேற்றும் இடத்தினை மாற்றியமைக்க அரசு ஒப்புதலுக்கு நன்றி தெரிவித்த நகராட்சி தலைவர் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள்
குமாரபாளையம் நகராட்சியில் சொத்துவரி இலக்கை எட்டிய ஊழியர்களுக்கு பாராட்டு மற்றும் நீரேற்றும் இடத்தினை மாற்றியமைக்க அரசு ஒப்புதலுக்கு நகராட்சி தலைவர் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்தனர்.
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், ஆணையாளர் (பொ) அருள் தலைமையில் நடந்தது. இதில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:
விஜய்கண்ணன் (நகராட்சி தலைவர்):
வெங்கடேசன் (துணை தலைவர்):
குமாரபாளையம் நகராட்சியில் சொத்துவரி இலக்கை எட்டிய அனைத்து ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். மேலும் தற்போது குடிநீருக்காக காவிரி ஆற்றில் நீர் எடுக்கும் இடம் சாயக்கழிவு கலப்பதால், அந்த இடத்திற்கு பதிலாக, ஊராட்சிகோட்டை தடுப்பணை பகுதியிலிருந்து குடிநீர் எடுக்க நகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை பரிசீலித்து அதற்கு அனுமதி கொடுத்ததுடன், நிதி ஒதுக்கீடும் உடனே செய்யப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்துள்ளர்கள். இதற்கு அனைவரின் சார்பில் நன்றி.
தர்மராஜன் (தி.மு.க.):
எனது வார்டில் வேகத்தடை அமைக்க வேண்டும். பல கூட்டத்தில் கேட்டு வருகிறேன்.
சுமதி (சுயேட்சை):
வடிகால் தூய்மை பணிக்கு, குப்பைகள் அகற்ற ஆட்கள் நீண்ட நாட்கள் கழித்து வந்தார்கள். இன்னும் அகற்றபாட வேண்டிய குப்பைகள் உள்ளன. விரைவில் அதற்கும் ஆட்கள் அனுப்பி வைத்து சுத்தம் செய்து தர வேண்டும்.
பாலசுப்ரமணி (அ.தி.மு.க.):
ஏற்கனவே டெண்டர் விடப்பட்ட பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை வேண்டும்.
வேல்முருகன் (தி.மு.க) :
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வணிக வளாகம் கட்ட அனுமதி கொடுத்த அரசுக்கு நன்றி. இதற்காக முயற்சி செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
பரிமளம்(தி.மு.க.):
ஆனங்கூர் பிரிவு சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவ, மாணவியர் சென்று வரும் வேளையில், போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். போலீஸ் இல்லாததால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு மாணவ, மாணவியர் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன் போலீஸ் நியமிக்க வேண்டும்.
பழனிச்சாமி (அ.தி.மு.க.):
எங்கள் வார்டில் பழுதான நீர்நிலை தொட்டி அகற்றப்பட வேண்டும். எந்நேரமும் இடிந்து விடும் நிலையில் உள்ளது.
ஜேம்ஸ் : (தி.மு.க.):
எங்கள் வார்டில் இரண்டு வடிகால்கள் மிகவும் சேதமடைத்து உள்ளது. அதனை சரி செய்திட வேண்டும்.
கிருஷ்ணவேணி(தி.மு.க.):
பாறையூர் பகுதியில் உப்புநீர் பைப் போட்டு தர வேண்டும்.
விஜய்கண்ணன் (நகராட்சி தலைவர்):
உறுப்பினர்கள் கூறிய அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.
இதில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகரமன்ற கூட்டம் நடந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu