குமாரபாளையத்தில் வடிகால் அமைக்கும் பணி.. நகராட்சி சேர்மன் நேரில் ஆய்வு...

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் வடிகால் பணிகள் குறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான மாசி மாத திருவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோயிலில் மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறுவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.
இந்த நிலையில், தேர்த்திருவிழா நடைபெறுவதற்கு முன்பு அந்தப் பகுதியில் எந்தவித குறையும் இருக்கக் கூடாது என அந்தப் பகுதி மக்கள் ஒவ்வொரு விசயத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், கோயில் பகுதியில் உள்ள வடிகால் சேதமாகி உள்ளது என்றும், அதனை உடனே சரி செய்து கொடுக்குமாறும் கோயில் நிர்வாகத்தினர் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணனிடம் புகார் மனு கொடுத்தனர்.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் தொடர்ச்சியாக, காளியம்மன் கோயில் வளாகத்திற்கு நேரில் சென்ற நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கோயில் மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மக்கள் கோரிக்கையின்படி, வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, காளியம்மன் கோயில் மாசி தேர்த்திருவிழா குழு தலைவர் ரகுநாதன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஐயப்பன், கதிரேசன், கந்தசாமி, அன்பரசு, நடராஜபெருமாள் உள்பட பலர் உடனிருந்தனர். நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் பார்வையிட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டதற்கு காளியம்மன் கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu