அமரர் ஊர்தியிலிருந்து பூக்கள் கொட்ட, வழியில் பட்டாசு வெடிக்க நகராட்சி தடை
அமரர் ஊர்தியிலிருந்து பூக்கள் கொட்டவும், வழியில் பட்டாசு வெடிக்கவும் குமாரபாளையம் நகராட்சி சார்பில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை மின் மயான ஊழியர்களிடம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் எடுத்துரைத்தார்.
அமரர் ஊர்தியிலிருந்து பூக்கள் கொட்டவும், வழியில் பட்டாசு வெடிக்கவும் குமாரபாளையம் நகராட்சி சார்பில் தடை செய்யப்பட்டுள்ளது.
குமாரபாளையம் மின் மயானத்திற்கு வரும் அமரர் ஊர்தியிலிருந்து மயானத்திற்கு செல்லும் வழியில் தினசரி பலமுறை பூக்களை தூவி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ஐந்து முறைக்கு மேல் மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள சாலையில் பூக்கள் தூவுதல், பட்டாசுகள் வெடித்தல் ஆகியவை தொடர்ந்து நடந்து வருவதால், தெருக்களில் அசுத்தம் ஏற்படுகிறது. வழியில் உள்ள மக்களுக்கு அடிக்கடி சாலையை சுத்தம் செய்யவே சரியாக உள்ளது.
இறந்தவர் உடல்மீது போடப்பட்ட மாலைகள் என்பதால், இதனால் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின்படி, மின் மயானத்திற்கு சென்ற சேர்மன் விஜய்கண்ணன் மின் மயான ஊழியர்களிடம் கூறியதாவது:
அமரர் ஊர்தியில் மாலைகள் ஏற்றக்கூடாது, சாலையில் பூக்கள் வீசக்கூடாது, அப்படி வீசினால் துக்க வீட்டினருக்கு அபராதம் விதிக்கப்படும். அமரர் ஊர்தி ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். சடலம் எரியூட்ட வருவோரிடம் சாலைகளில் பூக்களை வீச மாட்டோம் என உறுதிமொழி படிவம் பெற்றுக்கொண்டு, எரியூட்ட பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். அப்போது நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மின் மயான பணியாளர்கள் கூறியதாவது: மின் மயானங்களில் உடல்களை தகனம் செய்ய குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கொரோனா பேரலைகளின் போது இறந்தவர்களின் உடல்களை எரிக்க 5 ஆயிரம் முதல் 10ஆயிரம் வரை அதிக கட்டணத்தை ஊழியர்கள் வசூலிப்பதாக புகார்கள் பல எழுந்தது. ஆனால், மின் மயானத்தில் உடலை தகனம் செய்ய ஜிஎஸ்டி வரி விதிப்பதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை என்று கூறினர்
2022 ஜூன் 29-ம் தேதி 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகள் வழங்கப்பட்டது. அந்த பரிந்துரைகளில், மின் மயானம் தொடர்பான பரிந்துரைகள் ஏதும் இடம்பெறவில்லை. மாறாக, சேவைகள் பிரிவில் சாலைகள், பாலங்கள், இரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுடுகாடு போன்றவற்றுக்கான பணி ஒப்பந்தத்திற்கு ஜிஎஸ்டி வரி 12%-ல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாக இடம்பெற்றுள்ளது.
மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க மத்திய அரசு முடிவு என நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளதாகப் பரப்பப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.
நாம் எல்லோருமே என்றாவது ஒரு நாள் போய்ச் சேரவேண்டிய இடம்... இந்த உலகில் `சமரசம்’ உலாவும் ஒரே இடம்... மயானம். தமிழ்நாட்டில் பல மயானங்கள் பராமரிப்பில்லாமல் இருக்கின்றன; சில, பொதுக் கழிப்பிடங்களாகப் பயன்படுகின்றன.
சில, போக்கிரிகள் பொழுதுபோக்கும் இடங்களாக இருக்கின்றன. சுகாதாரத்தோடு பராமரிக்கப்படுபவை இல்லவே இல்லையா? நிச்சயம் இருக்கின்றன. நவீனப்படுத்தப்பட்ட மின் மயானங்களில் பல, படு சுத்தமானவை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu