குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நியமன குழு தேர்தல் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நியமன குழு தேர்தல்   ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நியமனக்குழு தேர்தல் ஆலோசனை கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நியமனக்குழு தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சேர்மன் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நியமனக்குழு தேர்தல் ஆலோசனை கூட்டம் சேர்மன் விஜய் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இது குறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கூறியதாவது:-

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மார்ச் 31ல் நியமனக்குழு உறுப்பினர் தேர்தல், ஒப்பந்தக்குழு உறுப்பினர் தேர்தல் மற்றும் வரி மேல்முறையீடு குழு தேர்தல் ஆகியவை நடைபெறவுள்ளது. இதில் நியமனக்குழுவில் ஒரு கவுன்சிலர், ஒப்பந்தக்குழுவில் ஒரு கவுன்சிலர், மற்றும் வரி மேல்முறையீடு குழுவில் நான்கு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்த தேர்தல் சம்பந்தமாக அனைத்து கவுன்சிலர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழுவில் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் இதில் பங்கேற்ற வார்டு கவுன்சிலர்கள் அவரவர் வார்டு குறைகள் குறித்தும் கூறியுள்ளனர்.அவைகள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளின் குறைகளும் விரைவில் சரி செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், கோவிந்தராஜ், தர்மராஜன், சியாமளா, தீபா, கனகலட்சுமி, பூங்கொடி, நந்தினிதேவி, விஜயா, சித்ரா, சுமதி, கிருஷ்ணவேணி, உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நியமனக்குழு தேர்தல் ஆலோசனை கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி